அனல் பறக்கும் 'காலா' ட்ரெய்லர் வந்தாச்சு...!

Last Modified : 28 May, 2018 07:25 pm


பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஹுமா குரைஷி, நானா படேகர் நடிப்பில் தயாராகியுள்ள காலா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது..

கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் ரஞ்சித் காம்போவில் உருவாகியிருக்கும் காலா, ஏற்கனேவே அதிக எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. இதற்கிடையே ரஜினிகாந்த் அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கபாலியை போல, இது இயக்குனரின் படமாகவோ, சென்டிமெண்ட்டை மையமாக கொண்ட படமாகவோ இருக்காது. முழுக்க முழுக்க தனது மாஸை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என ரஜினி கூறியிருந்தார். 

முன்னதாக டீசர் வெளியானபோது, அதில் ரஜினி பேசிய வேங்கை மகன் டயலாக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், மீம்ஸாகவும் தினம் தினம் கலக்கி வருகிறது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டீசர் போல ட்ரெய்லரும் யூட்யூப்பில் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழே பிளே பட்டனை க்ளிக் செய்து ட்ரெய்லரை பார்த்து ரசியுங்கள்!


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close