சாமி இல்ல பூதம்: வெளியானது சாமி ஸ்கொயர் டிரைலர்

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2018 05:03 pm
saamy-square-trailer-released

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியானது. 

சாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் ஹரி. இதிலும் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் டிரைலர் அறிவித்தப்படி இன்று வெளியானது. பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியான இந்த டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் படத்தின் டிரைலரில் ஒரு முக்கிய வசனம் இடம் பெரும். விஜய், அஜித் படங்களில் ஒரு தவறு செய்தால்", "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்", "நீ பற்ற வைத்த நெருப்பொன்று" ஆகியவற்றின் வரிசையில் இந்த டிரைலரில் விக்ரம் "மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா" என்று சண்டை காட்சியின் போது கூறுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

மேலும் சாமி படத்தில் விக்ரம் பேசும் "போலீஸ் இல்ல பொறுக்கி" வசனத்தை போல இந்த படத்தில் "சாமி இல்ல பூதம்" என்று பேசியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close