’காலா’ பட ’தெருவிளக்கு’ பாடல் மேக்கிங் வீடியோ! 

  பால பாரதி   | Last Modified : 07 Jun, 2018 10:39 am
kaala-movie-behind-the-scenes-featuring-theruvilakku-song

’காலா’ படத்தில் இடம்பெறும் ‘தெருவிளக்கு’ என்கிற பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

கோடான கோடி ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ’காலா’ படம் பல சோதனைகளை வென்று இன்று திரைக்கு வந்திருக்கிறது. ‘கபாலி’ என்கிற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித், மீண்டும் ரஜினியை வைத்து இயக்கியிருக்கும் படம் என்பதாலும், சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் படத்தை தயாரித்திருப்பதாலும், மேலும் ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், பாலிவுட் பிரபலம் நானா படேகர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளிஜி என முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றிருப்பதாலும் ’காலா’ படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது!

அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் விதத்தில் ’காலா’ படம் வந்திருப்பதாக படத்தைப் பற்றி நல்லவிதமான கமெண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது. 

’காலா’வின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, பட்த்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்திருக்கிறது. 

’காலா’ படம் இன்று (ஜூன் 7) ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் ‘தெருவிளக்கு’ என்கிற பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close