பாலாஜி சக்திவேலுக்கு கை கொடுக்கும் முருகதாஸ்!

  பால பாரதி   | Last Modified : 08 Jun, 2018 05:33 am
director-balaji-sakthivel-s-movie-teaser-release

இயக்குநர் பாலாஜி சக்திவேலின்  ’யார் இவர்கள்?’ படத்தின் டீசரை இயக்குநர் முருகதாசும், நடிகர் துல்கர் சல்மானும் இன்று மாலை வெளியிடுகின்றனர்.
 
’காதல்’, ’வழக்கு எண் 18/9’ போன்ற சிறந்த படங்களை தந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் இப்போது 'ரா..ரா.. ராஜசேகர்' படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ’யார் இவர்கள்?’ என்கிற தனது அடுத்த பட வேலைகளைத் துரிதமாகத் தொடங்கிவிட்டார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்திலும் புதுமுகங்களே நடிக்கின்றனர். ஜாவத் ரியாஸ் இசையமைக்க, விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை மற்றும் விஜய் மில்டன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். 

கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக சொல்லும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ’யார் இவர்கள்?’ படத்தின் டீசரை இயக்குநர் முருகதாசும், நடிகர் துல்கர் சல்மானும் இன்று மாலை வெளியிடுகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close