காலாவுக்கு போட்டியாக களம் இறங்கும் விஸ்வரூபம்-2 ட்ரெய்லர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jun, 2018 07:49 pm
viswaroopam2-trailer-on-june-11th-5pm

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம்- 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலை ஜூன் 11 ஆம் தேது மாலை 5 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லரை இந்தியில் அமிர்கானும், தமிழில் ஸ்ருதி ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடவுள்ளனர். காலாவுக்கு போட்டியாக கமலும் விஸ்வரூபம் ட்ரைலரை வெளியிட்டு சக போட்டியாளர் என்பதை நிரூபித்துவருகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close