லைக்ஸை அள்ளும் ஆர்யா பட பாடல்!

  Bala   | Last Modified : 10 Jun, 2018 12:02 am
arya-s-gajiniknth-movie-hola-hola-song-most-likes

நேற்று முன்தினம் மாலை வெளியான, ஆர்யாவின் ’கஜினிகாந்த்’ படத்தின் ’ஹோலா..ஹோலா..’ என்கிற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் லைக்ஸை அள்ளுகிறது. 

கெளதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகா தேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய அடல்ட் காமெடிப் படங்களை இயக்கியதன் மூலமாக இளைஞர்கள் வட்டாரத்தில் ஏக பிரபலமாகியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் இப்போது, ஆர்யா - சாயிஷா ஜோடியாக நடித்திருக்கும் ’கஜினிகாந்த்’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு பால முரளி பாலு இசையமைத்திருக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பலே பலே மகாடிவோய்’ என்கிற படத்தின் ரீமேக்காகும். 

’கஜினிகாந்த்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், மற்றும் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில், ’கஜினிகாந்த்’ படத்தில் இடம் பெற்றுள்ள ’ஹோலா.. ஹோலா..’ என்கிற சிங்கிள் ட்ராக்கை படக்குழுவினர் நேற்று முன்தினம் மாலை வெளியிட்டனர். இப்பாடல் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் லைக்ஸ அள்ளுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close