'எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமல்ல பிரதர்' - விஸ்வரூபம் 2 டிரைலர்!

  திஷா   | Last Modified : 12 Jun, 2018 02:20 pm
vishwaroopam-2-trailer

பல பிரச்னைகளுக்குப் பிறகு கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்தப் படம் விஸ்வரூபம். இதில் கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். கமல் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு இசை ஜிப்ரான். பல போராட்டங்களுக்குப் பிறகு இந்தப் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

அதன் பிறகு இதன் இரண்டாவது பாகத்தையும் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார் கமல். முதல் பாகத்தில் இடம்பெற்ற குழுவினரே இதிலும் வேலை செய்தார்கள். 2014-ம் ஆண்டு வெளியிட வேண்டும் என நினைத்த கமலுக்கு, புரொடக்‌ஷன் பிரச்னை பெரிய முட்டுக்கட்டைப் போட்டது. இதனால் படத்தின் வெளியீடும் தள்ளிக் கொண்டே போனது. 

தற்போது அனைத்துப் பிரச்னைகளும் முடிந்து விட்டதால், சுதந்திர தினத்தையொட்டி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கமல். அதன் முன்னோட்டமாக இன்று விஸ்வரூபம் 2-வின் டிரைலர் வெளியிடப் பட்டுள்ளது. இதன் தமிழ் பட டிரைலரை கமலின் மகளும் நடிகையுமான ஷ்ருதி ஹாசன் வெளியிட்டார். இந்தியில் அமீர்கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டு இருக்கிறார்கள். 

 

டிரைலரில் இடம் பெற்றுள்ள, "எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமல்ல பிரதர், ஆனா தேச துரோகியா இருக்குறது தப்பு" என்ற ஒற்றை ஆழ் வசனமும், முதல் பாகத்தில் இடம்பெற்ற 'இவன் யாரென்று தெரிகிறதா" என்ற பாடலும் டிரைலரில் ஒலிக்கின்றன.  அதோடு ஆக்‌ஷன் பிரியர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும் என்பதை முன்னோட்டத்தை வைத்தே தெரிந்துக் கொள்ள முடிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close