கமல்ஹாசன் சினிமாவுக்கு விரைவில் முழுக்கு!

  Bala   | Last Modified : 12 Jun, 2018 03:53 pm
kamalhaasan-good-buy-to-cinema

’நான் அரசியலுக்கு வந்து விட்டதால், இனி படங்களில் நடிப்பது குறையும்’ என கூறியிருப்பதன் மூலமாக நடிகர் கமல்ஹாசன், சினிமாவுக்கு முழுக்குப் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். 

கமல்ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியானகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது வரை ட்ரைலரை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ட்ரைலர் ரிலீசுக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கமல் கூறுகையில், “விஸ்வரூபம்-2’ படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நட்சத்திரங்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுப்போன கவுதமிக்கும் நன்றி.

’விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ‘விஸ்வரூபம்-2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும். இதில் நானும் பாடல் எழுதி இருக்கிறேன்.

’விஸ்வரூபம்’ படத்துக்கு அரசியல் ரீதியாக வந்ததுபோல் இந்த படத்துக்கும் எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன்.ஒருவேளை எதிர்ப்பு வந்தால், நான் அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். எனது அரசியல் பிரவேசத்தை முன்வைத்து இந்த படம் வரவில்லை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் சில முன்கதைகளுடன் இரண்டாம் பாகம் வருகிறது. ’சாபாஷ் நாயுடு’, ’இந்தியன் 2’ படங்களும் அடுத்தடுத்து வெளிவரும். அரசியலுக்கு வந்துவிட்டதால் இனி படங்களில் நடிப்பது குறையும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close