’கடைக்குட்டி சிங்கம்’  பாடல் லிரிக் வீடியோ!

  பால பாரதி   | Last Modified : 12 Jun, 2018 08:38 pm
kadaikutty-singam-movie-lyric-video

கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. 

விவசாயிகளையும், விவசாயத்தையும் பெருமைப் படுத்தும் விதத்தில் ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இதில் நாயகன் கார்த்தி, மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி காதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். எனவே, ‘பயிர் செய்ய விரும்பு’,‘விவசாயி’போன்ற கேப்ஷன்களோடு படத்தின் விளம்பரப் போஸ்டர்கள் இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்தப் படத்தில் ’செங்கதிரே..’, ’சண்டைக்காரி..’, ’வா ஜிக்கி..’, ’காளை காளை முரட்டுக் காளை..’ போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், ’கடைக்குட்டி சிங்கம்’ படப் பாடல்களின் லிரிக் வீடியோ, சமூக வலைதளங்களில்  வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  

’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நாயகன் கார்த்தி ஜோடியாக சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக் கின்றனர். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய,நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close