’ஜுங்கா’ ஆடியோ விழாவுக்கு சீருடையில் வந்த படக்குழு!   

  பால பாரதி   | Last Modified : 13 Jun, 2018 06:12 pm
junga-audio-release-stills

விஜய் சேதுபதியின் ’ஜுங்கா’ படத்தின் ஆடியோ விழாவுக்கு படக்குழுவினர் அனைவரும், நீலக் கலர் ஜிப்பா,இளம் பச்சை நிற வேட்டி என ஒரே சீருடையில் வந்திருந்தனர். 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல் இருவரும் இணைந்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வெற்றிக் கூட்டணி இப்போது, ‘ஜுங்கா’ படத்துக்காக மறுபடியும் இணைந்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடிகளாக சாயிஷா சைகல் மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்திருக்கின்றனர். யோகி பாபு காமெடிக்கு கை கொடுக்கிறார். இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தை ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து,‘விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி.’ஜுங்கா’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ‘கூட்டிப்போ கூடவே’என்கிற சின்கிள் ட்ராக் பாடல் ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், ’ஜுங்கா’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவுக்கு வந்திருந்த நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும், நீலக் கலர் ஜிப்பா,இளம் பச்சை நிற வேட்டியுடன் ஒரே சீருடையில் வந்திருந்தனர். விழாவில் ஆடியோவை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வெளியிட, இயக்குநர் ஜனநாதன் பெற்றுக் கொண்டார்.     

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close