சமூக வலைதளங்களை கலக்கும் ’ஜுங்கா’ ட்ரெய்லர்! 

  Bala   | Last Modified : 14 Jun, 2018 05:04 am
vijay-sethupathi-s-junga-trailer-release

விஜய் சேதுபதியின் ’ஜுங்கா’ படத்தின் ட்ரெய்லரை, ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பேர் பார்த்து பரவசமடைந்துள்ளனர்.   

ஜீவா நடித்த ’ரெளத்திரம்’, விஜய் சேதுபதி நடித்த’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ’காஸ்மேரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல்,‘ஜுங்கா’ படத்துக்காக மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார். 

விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டின், யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்திருக்கும் ’ஜுங்கா’ படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடிகர் அருண்பாண்டியனின் ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து,‘விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி.

’ஜுங்கா’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.

இந்த படத்தின் ட்ரெய்லரில் ஜிப்பா - வேஷ்டி கிராமத்து இளைஞன் தோற்றத்திலும், வித்தியாசமான சிகை அலங்காரத்தில், கோட்- ஷூட் போட்ட மலேசியா தாதா தோற்றத்திலும் வந்து மிரள வைக்கிறார் விஜய் சேதுபதி.மேலும் சாயிஷா மற்றும் மடோனாவுடன் டூயட் பாடியும், யோகி பாபுவிடன் சேர்ந்து காமெடி செய்தும் பரவசப்படுத்துகிறார்.

’ஜுங்கா’ படத்தின் இந்த ட்ரெய்லரை, சமூக வலைதளங்கள் வழியாக, ட்ரெய்லர் ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பேர் பார்த்து பரவசமடைந்துள்ளனர்.   
    


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close