நான் கஞ்சன் இல்லை... தாராளமா செலவு செய்துள்ளேன்: விஜய் சேதுபதி

  பால பாரதி   | Last Modified : 13 Jun, 2018 06:23 pm
junga-audio-rlease-function-vijaysethupathi-speech

கஞ்சத்தனத்துக்கும், சிக்கனத்துக்கும் உள்ள வேறுபாட்டுக்கு படவிழாவில்  விளக்கம் சொன்னார் விஜய் சேதுபதி.

ஜுங்கா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. விழாவில், படத்தின் நாயகன் விஜய் சேதுபதி பேசியது, “இந்தப் படத்துக்கு ‘ஜுங்கா’என கதைக்குப் பொருத்தமான தலைப்பைத் தான் வைத்திருக்கிறோம். ’ஜுங்கா’ என்றால் என்ன? என்பதை, படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப்பற்றி விரிவாகச் சொல்ல முடியாது. இதில் நான் டானாக் நடித்திருக்கிறேன். அந்த டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும், வித்தியாசமான அப்ரோச்சுடன் உருவாகியிருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது.

இதில் வரும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை, சிக்கனமானவர். கஞ்சத்தனத்துக்கும், சிக்கனத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தேவைக்கு கூட செலவு செய்யாமல் இருப்பது தான் கஞ்சத்தனம், தேவையில்லாமல் செலவு செய்ய கூடாது என நினைத்தால் அது சிக்கனம். அதாவது, இதில் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால், படத்துக்கு தாராளமாக செலவு செய்திருக்கிறேன்.

‘ஜுங்கா’வில் ’பஞ்ச்’ டயலாக் இருக்கா? இல்லையா? என்று கேட்காதீர்கள். என்னுடைய ’பஞ்ச்’ டயலாக்கை ரசிகர்கள்தான் தேர்தெடுக்கிறார்கள். நான் வெறும் டயலாக்காகத்தான் பேசுகிறேன்.
இதில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச், எப்போதும் என்னுடைய ஃபேவரைட். எந்தச் சூழலாக இருந்தாலும், அதனை எளிதாகக் கையாளக்கூடிய திறமையை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்” என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close