சினிமாவில் பேய் - பிசாசு கதைகள் பெருகிவிட்டன: இயக்குநர் சீனு ராமசாமி வேதனை!

  பால பாரதி   | Last Modified : 14 Jun, 2018 05:06 am
kuthoosi-movie-audio-launch

’சினிமாவில், பேய் - பிசாசுக் கதைகள் பெருகி விட்டன. பேய் - பிசாசை நம்புவதை விட, விவசாயத்தை நம்பி படமெடுக்கலாம்!’ என இயக்குநர் சீனு ராமசாமி பேசியுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தம்பியான திலீபன், ’காலா’வில் ரஜினியின் மகனாக வந்து அனைவரின் கவனத்திலும் பதிந்திருக்கிறார். ஏற்கனவே ’வத்திக்குச்சி’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் திலீபன் இப்போது, ’குத்தூசி’ என்கிற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இயற்கை விவசாயத்தின் மேன்மையைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தில் புதுமுகம் அமலா நாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, ‘ஆடுகளம்’  ஜெயபாலன், அந்தோணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீலஷ்மி  ஸ்டுடியோஸ்  சார்பில் எம்.தியாகராஜன்  தயாரித்துள்ள இப் படத்தை அறிமுக இயக்குநர் சிவசக்தி இயக்கியிருக்கிறார். 

’குத்தூசி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டு, ஆடியோவை வெளியிட்டு பேசும்போது, ”தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன், தன் தந்தையை, ‘அப்பா’ என அழகு தமிழில் அழைத்தால், அதை ரசிக்காமல், ’ஒழுங்காக டாடினு கூப்பிடு, கான்வென்ட்ல படைக்க வைக்கிறேன்’ என்று மகனை கண்டிக்கிறார். இந்த சூழலில் இந்தப் படத்தின் நாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. 

சினிமாவில் பேயையும், பிசாசையும், மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில், விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது. பேய் - பிசாசை நம்புவதை விட, விவசாயத்தை நம்பி படமெடுக்கலாம்!”என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close