’என் சாவு, கட்டிங் வாங்குற கபோதிங்க கையில் இல்லை!’ - பரபரக்க வைக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ பட ட்ரெய்லர்!

  பால பாரதி   | Last Modified : 14 Jun, 2018 12:59 pm
traffic-ramasamy-trailer

பரபரக்க வைக்க வைக்கும் நெருப்பு வசனங்களோடு, ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'டிராஃபிக் ராமசாமி' என்கிற பெயரிலேயே தயராகியிருக்கும் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோகிணி நடித்துள்ளார். விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்ரனர். அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். 

இரு தினங்களுக்கு முன் இந்தப் பத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. இந்நிலையில், 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இதில், “என் சாவு, கட்டிங் வாங்குற கபோதிங்க கையில் இல்லை! என் சாவு, சொம்பு தூக்குற ஜால்ராங்க கையிலும் இல்லை! கடவுள் என் கூட இருக்கும் வரை எந்த பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாத..! என்பது போன்ற பரபரக்க வைக்க வைக்கும் நெருப்பு வசனங்களோடு  இந்தப் படத்தின் ட்ரெய்லர் உள்ளது.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close