பிரபுதேவாவை திகைக்க வைத்த தித்யா! - லக்‌ஷ்மி டீசர்

  திஷா   | Last Modified : 15 Jun, 2018 06:28 pm
lakshmi-teaser

வாழ்க்கையில் நடந்த கசப்புகளுக்குப் பிறகு தனது கரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் விஜய். இவர் இயக்கிய `கரு' படம் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகியிருந்தது. தற்போது லக்‌ஷ்மி எனும் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா பாண்டே, கருணாகரன், கோவை சரளா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நடனத்தையும் இசையையும் மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. நடனம் கற்றுத் தரும் பிரபுதேவாவின் மாணவியாக தித்யா நடித்திருக்கிறார். 

இதன் டீசர் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்போது இதன் இரண்டாவது டீசரும் வெளியாகியுள்ளது. இதில் ஃபுல் எனர்ஜியுடன் தித்யா நடனமாடிக் கொண்டிருப்பது போல் உள்ளது. இடையில் பிரபுதேவா வந்து செல்கிறார். 

பிரபுதேவா - விஜய் கூட்டணியில் உருவான `தேவி' திரைப்படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைந்திருக்கும் லக்‌ஷ்மி அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close