அதர்வாவின் `செம போத ஆகாதே'  சினிக் பீக் 2 !

  Bala   | Last Modified : 21 Jun, 2018 10:43 pm

semma-botha-aagathey-sneak-peek-02

அதர்வாவின் ’செமபோத ஆகாதே’ படத்தின் 2-வது சினிக் பீக்கைபடக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இளம் ஹீரோவான அதர்வா, இப்போது 'செம போத ஆகாதே', 'இமைக்கா நொடிகள்' மற்றும் ’பூமராங்’ என மிகவும் பிஸியாக இருக்கிறார். இதில்,`செம போத ஆகாதே' படம் அடுத்த வாரத்தில் ரிலீஸ் ஆகிறது! பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 'பாணா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்தப் படத்தை வெளியிடுகிறது. வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் 'செம போத ஆகாதே' படத்தின் 2-வது சினிக் பீக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close