’செம போத ஆகாத’ பட ’அயிட்டம் காரன்..’ பாடல் வீடியோ!

  Bala   | Last Modified : 27 Jun, 2018 01:57 pm
itemkaaran-video-song-from-semma-botha-aagathey-movie

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் அயிட்டம்காரன் பாடல் வீடியோ வெளிவந்துள்ளது.

இளம் ஹீரோ அதர்வா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'செம போத ஆகாதே'. இந்தப் படத்தில் அதர்வாவுக்கு மிஷ்டி மற்றும் அனைகா சோதி இருவரும் ஜோடிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

'பாணா காத்தாடி' படத்திற்கு பிறகு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நாயகன் அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படம் நாளை மறுநாள் (ஜூன் 29 ) திரைக்கு வருகிறது. இந்நிலையில், 'செம போத ஆகாதே', படத்தில் இடம்பெறும் ’அயிட்டம் காரன்’ என்கிற பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close