’அசுரவதம்’ படத்தின் 2-வது ட்ரெய்லர்!

  பால பாரதி   | Last Modified : 28 Jun, 2018 05:25 am
asuravatham-movie-2nd-trailer

சசிகுமாரின் நடிப்பில் தயாராகியிருக்கும் ’அசுரவதம்’ படத்தின் 2-வது ட்ரெய்லர் வெளிவந்திருக்கிறது.

சசிகுமார் இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் ’நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர்,‘அசுரவதம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 
இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மருது பாண்டியன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்த் இசையமைத்திருக்கிறார்.

’அசுரவதம்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடுவே நடக்கும் போராட்டத்தைப் பற்றிப் பேசும் இந்தப் படம், நாளை மறுநாள் (ஜூன் 29) ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், ’அசுரவதம்’ படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close