வெளியானது ’இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர்!

  Bala   | Last Modified : 27 Jun, 2018 01:59 pm
imakka-nodigal-trailer-release

நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ’இமைக்கா நொடிகள்’ படத்தின் ட்ரெய்லர் சற்று நேரத்துக்கு முன் வெளியானது.
 
நயன்தாரா முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ’இமைக்கா நொடிகள்’. இதில் நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அதர்வா - ராஷி கண்ணா இருவரும் இளம் ஜோடிகாளாக வலம் வருகின்றனர். பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார். கேமியோ ஃபிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை ‘டிமான்ட்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். 

’இமைக்கா நொடிகள்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதையடுத்து  இந்தப் படத்தின் ட்ரெய்லர் சற்று நேரத்திற்கு முன் சமூக வலைதளங்களில் வெளியானது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close