செம லைக்ஸ் குவிக்கும் பிரபுதேவா பாடல்!

  Bala   | Last Modified : 28 Jun, 2018 12:56 pm
prabhu-deva-s-lakshmi-movie-morrakka-song-most-likes

பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘லக்ஷ்மி’ படத்தின் ’மொராக்கா’ சிங்கிள் ட்ராக்,  வெளிவந்த சில மணி நேரத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று செம லைக்ஸ் குவித்து வருகிறது! 

நாயகன் பிரபு தேவா, இயக்குநர் ஏ.எல்.விஜய் கூட்டணியில் உருவான ’தேவி’ படம் சூப்பர் ஹிட்டானதால், அந்த காம்போ மீண்டும் ‘லக்ஷ்மி’ படத்துக்காக இணைந் துள்ளது! இதில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார், மேலும் ‘சூப்பர் டான்ஸர் 2016’ ரியாலிட்டி ஷோ வின்னர் தித்யா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

நடனப் புயல் பிரபு தேவாவை மனதில் வைத்தே இயக்குநர் ஏ.எல்.விஜய் கதையை உருவாக்கியிருப்பார் போல, இந்தப் படம் நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்த்தில் மொத்தம் 12 பாடல்களை வைத்திருக்கிறார்களாம்! இசை மற்றும் நடனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சூப்பர் ஹிட் மெட்டுக்களை போட்டு அசத்தியிருக்கிறாராம் இசையமைப் பாளர் சாம் சி.எஸ்! 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிரமோத் ஃபிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே சமீபத்தில், வெளியிடப்பட்ட 2 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ’மொராக்கா…’ (Morrakka) என்கிற சிங்கிள் டிராக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இப்பாடல் வெளிவந்த வேகத்தில் சில மணி நேரங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று செம லைக்ஸ் குவித்து வருகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close