விஜய் சேதுபதி ரசிகர்களுக்காகவே உருவான பாடல் வீடியோ!

  பால பாரதி   | Last Modified : 04 Jul, 2018 01:50 am
junga-movie-special-song-video

‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதி ரசிகர்களுக்காகவே ஸ்பெஷலாக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக் கூட்டணியான விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல் இருவரும் மீண்டும் இணைந்து ‘ஜுங்கா’படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடிகளாக சாயிஷா சைகல் மற்றும் மடோனா செபாஸ்டின் இருவரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்க, டட்லி ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ‘கூட்டிப்போ கூடவே’ என்கிற சிங்கிள் ட்ராக் பாடல் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப் படுத்தியது.

இதற்கிடையே, ’ஜுங்கா’படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் விஜய் சேதுபதி,”நான் பேசும் ’பன்ச்’ டயலாக்ஸ் அத்தனையையும் ரசிகர்கள் தான் முடிவு செய்கிறார்கள்!” என பேசியிருந்தார். இது, விஜய் சேதுபதி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

இந்நிலையில், ’ஜுங்கா’ பட இயக்குநர் கோகுல், இசையமைப்பாளர் விபின் சித்தார்த், பாடலாசிரியர் லலிதானந்த் ஆகியோர் சேர்ந்து விஜய் சேதுபதி ரசிகர்களுக்காகவே, ’ரசிகனை ரசிக்கும் தலைவா..’ என்கிற ஸ்பெஷல் பாடலை உருவாக்கி, அதில் ’ஜுங்கா’ படத்தில் வரும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை சேர்த்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தற்போது வெளிவந்திருக்கும் இந்த வீடியோ, விஜய் சேதுபதி ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close