3 முன்னணி ஹீரோக்கள் வெளியிட்ட வேட்டைநாய் டீசர்!

  Bala   | Last Modified : 06 Jul, 2018 06:06 pm
r-k-suresh-is-the-three-main-heroes-of-the-movie-teaser

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வேட்டை நாய் ‘படத்தின் டீசரை விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று முன்னணி ஹீரோக்கள் வெளியிட்டனர்.

’ஸ்டூடியோ 9’ என்கிற பட நிறுவனத்தின் மூலமாக ’தர்மதுரை’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். பிறகு, விஷால் நடிப்பில் வந்த ’மருது’ படத்திலும் வில்லனாக வந்து மிரட்டினார். 

இப்போது அவர், ‘பில்லா பாண்டி’ மற்றும் ’வேட்டை நாய்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வேட்டை நாய்’ படத்தை  சுரபி பிக்சர்ஸ் மற்றும் தாய் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக புதுமுகம் சுபிக்‌ஷா நடிக்கிறார். நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்றுள்ள இந்தப் படத்தில் ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக் ஆகியோரும் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஜெய்சங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, புதுமுகம் கணேஷ் இசையமைக்கிறார். 

இந்நிலையில்,’வேட்டை நாய்’ படத்தின் டீசரை விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி என மூன்று முக்கிய ஹீரோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தன் படத்து டீசரை முன்னணி நாயகர்கள் வெளியிட்டு இருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் ஆர்.கே சுரேஷ். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close