’மணியார் குடும்பம்’ பட ’எம்மனசுக்குள்ள’ பாடல் வீடியோ !

  Bala   | Last Modified : 07 Jul, 2018 07:57 am

maniyar-kudumbam-movie-em-manasukkulla-song-making-video-release

நடிகர் தம்பி ராமையா மகனை ஹீரோவாக போட்டு இயக்கியிருக்கும் ’மணியார் குடும்பம்’ படத்தின் ’எம் மனசுக்குள்ள..’ என்கிற பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம் வரும் தம்பி ராமையா, ஒரு இயக்குநர் என்பது வெகு சிலருக்கே தெரியும்! அவர், முரளியை வைத்து 'மனுநீதி', வடிவேலுவை வைத்து ’இந்திரலோகத்தில் நா,அழகப்பன்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். நடுவே, திடீரென நடிகராக மாறி, வடிவேலு காம்பினேஷனில் பல படங்களில் வந்து போன தம்பி ராமையா, `மைனா' படத்தில் சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருது பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

நடிப்பில் பிஸியானதால் படம் இயக்குவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த தம்பி ராமையா தற்போது, மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து 'மணியார் குடும்பம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அத்துடன், இந்தப் படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் என்கிற இன்னொரு அவதாரமும் எடுத்திருக்கிறார் தம்பி ராமையா. 

இதில் உமாபதிக்கு ஜோடிகளாக மிருதுளா முரளி, 'பிக்பாஸ்' யாஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி முக்கிய வேடம் ஏற்றுள்ளார். ’மணியார் குடும்பம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் டி.இமான் பாடியிருக்கும் ’எம் மனசுக்குள்ள..’என்கிற பாடல், மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
 


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close