கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் - ட்ரைலர்!

  திஷா   | Last Modified : 07 Jul, 2018 02:11 pm
kadaikutty-singam-trailer

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி, பாண்டிராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருக்கிறார். இதனை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இதில் சாயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா என மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். தவிர, முக்கிய வேடங்களில் சத்யராஜ், சூரி, பானுப்ரியா, விஜி சந்திர சேகர், யுவராணி ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


 
சமீபத்தில், வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் கடைக்குட்டி சிங்கம் எனவும் தெலுங்கில் சின்ன பாபு எனவும் ஒரே நேரத்தில் 2 மொழிகளில் இந்தப் படம் தயாராகியுள்ளது. அதோடு சென்சாரில் 'யூ' சான்றிதழையும் பெற்றுள்ளது. ஜூலை 13-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close