’ஜருகண்டி’ படத்தின் ட்ரெய்லர்!  

  Bala   | Last Modified : 07 Jul, 2018 12:54 pm
actor-jai-s-jarugandi-movie-trailer-release

ஜெய் நடிப்பில் தயாராகியிருக்கும் ’ஜருகண்டி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  

’சென்னை -28’, ’ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் நிதின் சத்யா, ’ஜருகண்டி’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். இதில், ஜெய் ஹீரோவாக நடித்திருக்கிறார். ’ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம்’ படத்தில் நடித்த ரெபா மோனிகா என்கிற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரோபோ சஙகர், ’பிக்பாஸ்’ பிரபலம் டேனியல் போப் ஆகியோர் காமெடிக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

இந்நிலையில், ’ஜருகண்டி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ஜாலியாக வாழ்வதற்காக, போலி ஆவணங்களை வைத்து நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, ’கல்தா’ கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் ஜெய் நடித்திருப்பது இந்த ட்ரெய்லர் மூலமாக தெரிய வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close