`நாடோடிகள் 2'வின் 3-வது ஜஸ்ட் லுக் வெளியிடும் ஜெயம் ரவி!   

  Bala   | Last Modified : 12 Jul, 2018 08:39 pm
jayam-ravi-is-the-release-of-3rd-just-look-of-naadodigal-2

சூர்யா மற்றும் ஆர்யாவைத் தொடர்ந்து, `நாடோடிகள் 2'  படத்தின் 3-வது ஜஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் ஜெயம் ரவி!

`நாடோடிகள்' படத்தின் ஹிட் கொடுத்த தெம்பில், இயக்குநர் சமுத்திரகனியும், நாயகன் சசிகுமாரும் மறுபடியும் இணைந்து `நாடோடிகள் 2' படத்தை தற்போது உருவாக்கி உள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக அஞ்சலியும், அவரின் தங்கையாக அதுல்யாவும் நடிக்கின்றனர். மேலும் பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக முக்கிய வசனங்கள் உள்ள வீடியோவை ’ஜஸ்ட் லுக்’ என்கிற பெயரில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர். முதல் ’ஜஸ்ட் லுக்’கை சூர்யாவும், 2-வது ’ஜஸ்ட் லுக்’கை ஆர்யாவும் சமீபத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில், 3-வது ஜஸ்ட் லுக்கை ஜூலை 14ம் தேதி மாலை 5 மணிக்கு ஜெயம்ரவி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close