‘கடைக்குட்டி சிங்கம்’  சினிக் பீக் ரிலீஸ்!

  பால பாரதி   | Last Modified : 12 Jul, 2018 10:43 am
karthi-s-kadaikkutty-singam-sneak-peek-release

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’  திரைப்படம் நாளை திரைக்கு வரும் நிலையில், படத்தின் 4 நிமிடக் காட்சிகள் உள்ள ’சினிக் பீக்’கை வெளியிட்டுள்ளனர். 

விவசாயத்தையும் , விவசாயிகளையும் கொண்டாடும் விதமாக இயக்குநர் பாண்டிராஜ் உருவாக்கியிருக்கும் ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் கெத்து காட்டும் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின் மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இதில் கார்த்தி, சயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா,  சத்யராஜ், சூரி, மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது! தவிர, நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் வந்து கலக்கியிருக்கிறாராம். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் நாளை (ஜூலை 13) ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இடம்பெறும் 4 நிமிட காட்சிகள் கொண்ட ’சினிக் பீக்’கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close