வசனமே இல்லாமல் வெளியான “96” டீசர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jul, 2018 08:00 pm
96-official-teaser-released

விஜய் சேதுபதி- த்ரிஷா காமினேஷனில் உருவாகியுள்ள 96 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் காலையில் வெளியானதை தொடர்ந்து தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ள 96 படத்தில் புகைப்பட கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே தனி!

படத்தில் மரத்தில் தொங்குவது போன்று வித்தியாசமான தோற்றத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் புகைப்படத்திற்காக தான். டீசரில் கேமராவுடன் சுற்றும் விஜய் சேதுபதி பல புகைப்படங்களை வித்தியாசமாக எடுப்பது போன்று டீசர் தொடங்குகிறது. 1.22 நிமிடங்களில் வெளியான இப்படத்தின் டீசர் வசனமே இல்லாமல் கோவிந்த் மேனன் இசையில் ஆழமாக கதைக்குள் இழுத்து செல்கிறது படத்தின் டீசர்.

நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கியுள்ள த்ரிஷா அமைதியான காரக்கெட்டரில் வந்து செல்வது போலவும், அவர் வரும் இடத்தில் “காதலே காதலே” என்ற மெல்லிசை பாடல் ஒலிப்பது போலவும் வருடியுள்ளது 96 படத்தின் டீசர்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close