’தீதும் நன்றும்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 14 Jul, 2018 11:55 pm
theethum-nandrum-official-trailer

’தீதும் நன்றும்’ படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.   

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்த சந்தீப் ராஜ், ஹீரோவாக நடித்திருக்கும் படம் ’தீதும் நன்றும்’. இதில் ‘8 தோட்டாக்கள்’ பட புகழ் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராசு ரஞ்சித், ஈசன், லிஜிமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சில்வர் ஸ்கிரின் நிறுவனத்தின் சார்பில் சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள இப் படத்துக்கு சி.சத்யா இசையமைக்க, கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இதில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கும் ராசு ரஜித் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

அன்றாடத் தேவைகளுக்காக சின்னச் சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதையுடன் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், ’தீதும் நன்றும்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close