எம்ஜிஆர் ஸ்டைல் பிடிக்கும் - பிரபுதேவா நெகிழ்ச்சி! 

  பால பாரதி   | Last Modified : 16 Jul, 2018 06:26 pm
mgr-s-kizhakku-africavil-raju-trailer-and-audio-release

’கிழக்கு ஆப்பிரிக்கவில் ராஜூ’ அனிமேஷன் படத்தின் ஆடியோ விழாவில்,  ’எம்ஜிஆரின் ஸ்டைல் அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என நெகிழ்ச்சியுடன் சொன்னார் பிரபுதேவா.

எம்.ஜி.ஆர், லதா, மஞ்சுளா, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் 1972ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’உலகம் சுற்றும் வாலிபன்’. இதன் இரண்டாம் பாகமாக ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற படத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் எம்.ஜி.ஆர், அரசியலில் தீவிரமாக இறங்கி முதலமைச்சராக ஆனதால் அந்த படம் கை விடப்பட்டது! 

எம்.ஜிஆரின் கனவை நிறைவேற்றும் விதத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படமாக உருவாகி உள்ளது! இதில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை அருள் மூர்த்தி இயக்கியிருக்கிறார், பிரபு தேவா - ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் உலக எம்.ஜி.ஆர் பேரவை சார்பில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்த மிகப் பெரிய மாநாட்டில், ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடந்தது.கல்வியாளர் மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் இருவரும் இசைத்தகட்டினை வெளியிட, பிரபுதேவாவும், இயக்குநர் விஜய்யும் பெற்றுக் கொண்டனர். 

விழாவில் பிரபுதேவா பேசுகையில், “எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன. என் அப்பா, எம்.ஜி.ஆருக்கு 4 படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மெய் மறந்தேன்” என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close