ஹரிஷை மிரட்டும் ரைசா: கலர்ஃபுல் பியார் பிரேமா காதல் டிரைலர்

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2018 10:47 am
pyaar-prema-kadhal-trailer-goes-viral

யுவன் சங்கர் ராஜா தயாரித்து இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல். புதுமுக இயக்குநர் எலன் இயக்கிய உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் யுவனே இந்த படத்தை தயாரித்துள்ளார். 

இப்படத்தின் 2 பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானது. 

மிடில் கிளாஸ் பையன், எலைட்டான பெண்ணும் இடையே நடக்கும் காதல் கதை என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. டிரெண்ட்டுக்கு ஏற்றார் போல பல அம்சங்கள் சேர்த்து நீண்ட நாட்களுக்கு பிறகு கலர்ஃபுல்லான டிரைலாக இருக்கிறது. ஸ்டேட்ஸ் அப்டேட் செய்வதையே பெரிய வேலையாக நினைத்திருக்கும் ஹீரோ ஹரிஷ் கல்யாண, லாஸ் ஏஞ்சல்ஸில் ஹோட்டல் வைக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கும் ரைசாவை காதலிக்கிறார். ரைசா எதிர்ப்பார்க்கும் பையனாக ஹரிஷ் இல்லை என்பது போல டிரைலர் செல்கிறது. 

டிரைலரில் கதாநாயகி பீர் அடிப்பது, மெடிக்கல் ஷாப்பில் 'எதாவது வேணும்னா வாங்கிக்க' என சூசகமாக கூறுவது என தமிழுக்கு கொஞ்சம் புதிதான காட்சிகளுடன் இளம் ரசிகர்களை கவர தேவையான அனைத்தும் உள்ளது. குறிப்பாக ஹரிஷ் கல்யாணை "சேர்ந்து எடுத்து புகைப்படங்களை லீக் பண்ணிடுவேன்" மிரட்டுவது ரகளை. டிரைலரிலேயே ஹரிஷ் மற்றும் ரைசாவின் கெமிஸ்டிரி அழகாக இருக்கிறது. 

சீரியசாக சென்று கொண்டு இருக்கும் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு கலர்ஃபுல் காதல் படமாக பியார் பிரேமா காதல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close