’பேரன்பு’ படத்தின் 2-வது டீசர்!  

  Bala   | Last Modified : 23 Jul, 2018 06:11 pm
peranbu-official-teaser-2

மம்முட்டியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ’பேரன்பு’ படத்தின் 2-வது டீசர் வெளிவந்திருக்கிறது. 

தலை சிறந்த நடிகர் மம்மூட்டியின் நடிப்பு, தரமான படைப்புக்களை தரும் ராமின் இயக்கம், யுவன் சங்கர் ராஜாவின் இசை ,வெளியாவதற்கு முன்பே உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம்... என பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி யிருக்கும் ’பேரன்பு’ படத்தின் ஆடியோ மற்றும் முதல் டீசர் ரசிகர்கள் மத்தியில் மேலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

ரசிகர்களிடையே முதல் டீசருக்கு கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, ’பேரன்பு’ படத்தின் 2-வது டீசர் வெளிவந்திருக்கிறது. 
'இயற்கை இரக்கமற்றது' என்கிற மம்மூட்டியின் குரலோடு தொடங்கும் முதல் டீசரும் சரி, இப்போது வந்திருக்கும் இரண்டாவது டீசரும் சரி, இதுவொரு தகப்பனுக்கும் ,மகளுக்கும் நடுவே மண்டிக்கிடக்கும் பேரன்பைப் பற்றி மிகவும் அழுத்தமாகப் பேசுகிற படம் என்பதை உணர முடிகிறது.   

’பேரன்பு’ படத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வெகுவிரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close