மணிரத்னம் வெளியிட்ட 'பூமராங்' டிரைலர்

  கனிமொழி   | Last Modified : 03 Aug, 2018 12:48 pm
boomerang-trailer-released-by-manirathnam

'செம போத ஆகாதே' படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் `ருக்குமணி வண்டி வருது', `இமைக்கா  நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த', `பூமராங்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் `பூமராங்' படத்தின் டிரைலரை பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

அதர்வா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார். மேலும் இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடித்திருக்கிறார்.

அர்ஜுன் ரெட்டி திரைபடம் மூலம் பிரபலமான ராதான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை சோனி இசை நிறுவனம் வாங்கியுள்ளது. ஜெயம் கொண்டான் இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய ஆர் கண்ணன், இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக இருந்ததினால் தன் படத்தின் டிரைலரை அவர் குரு மூலம் வெளியிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close