சத்யராஜ், வரலட்சுமி விடுக்கும் 'எச்சரிக்கை': இரண்டாவது ட்ரெய்லர் வெளியீடு!

  கனிமொழி   | Last Modified : 06 Aug, 2018 09:36 pm
echarikkai-movie-s-second-trailer-is-out

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எச்சரிக்கை படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

லட்சுமி மற்றும் மா குறும்பட இயக்குனர் சர்ஜூன் கே.எம்  இயக்குனராக அறிமுகமாகும் படம் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'. லட்சுமி, மா இந்த இரண்டு குறும்படங்களுமே சமுகவளைதலங்களில் வைரலான படங்கள். இன்னும் சில இடங்களில் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சர்ஜுன் கே.எம் இயக்கிவரும் இப்படத்தில் யோகி பாபு, கிஷோர் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சுந்தரமூர்த்தி. மேலும் இப்படத்தில் சத்யராஜ், வரலட்சுமி ஆகியோர் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் 2வது ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

த்ரில்லர் படமாக உருவாகி வரும், இதன் இரண்டாவது ட்ரெய்லரும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் பரபரப்பாக வெளிவந்துள்ளது. 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' இம்மாதம் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close