'60 வயது மாநிறம்' டிரைலர் வெளியானது

  கனிமொழி   | Last Modified : 15 Aug, 2018 04:35 pm
60-vayathyu-maniram-trailer-released

ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு நடிக்கும் ’60 வயது மாநிறம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ்,விக்ரம் பிரபு, சமுத்திர கனி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை 'வி க்ரியேஷன்ஸ்' சார்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் தந்தையை தேடித் திரியும் மகன் என்பது தான் இந்த படத்தின் கதை சுருக்கம். இதில் சமுத்திரகனி, இந்துஜா, மோகன் வி ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்தாண்டு கன்னட மொழியில் வெளியான ‘கொத்தி பன்னா சர்தாரா மை கட்டு” என்ற படத்தின் தமிழ் ரீமேக் '60 வயது மாநிறம்' என்பது குறிப்பிடத்தக்கது.

உணர்வு ரீதியான படைப்பாக உருவாகியுள்ள ‘60 வயது மாநிறம்’ படம் இந்தாண்டு அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close