சமந்தாவின் யூ-டர்ன் டிரைலர் வெளியானது

  கனிமொழி   | Last Modified : 17 Aug, 2018 04:46 pm
samantha-s-u-turn-trailer-released

கன்னடத்தில் 2016-ம் ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் 'யூ டர்ன்'. ஹாரர்-த்ரில்லர் ஜானர் படம் இது . இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை பவண்குமார் இயக்கியுள்ளார். சமந்தா, ஆதி, பூமிகா, நரேன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்ற நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் யூ-டர்ன் படம் செப்டம்பர் 13 வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்க பட்டிருந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்படும் என சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டது. ஆதி போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பது இந்த டிரைலர் மூலம் தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close