இணையத்தை கலக்கும் சீமராஜா ட்ரெய்லர்

  கனிமொழி   | Last Modified : 02 Sep, 2018 03:09 pm
seemaraja-trailer-released

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய  திரைப்படங்களை இயக்கிய பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனோடு சீமராஜா படத்தில் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு இமான் இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'வரேன் வரேன் சீமராஜா' பாடல் செம ஹிட் ஆனது. மேலும் இந்த படம் வரும்  செப்டம்பர் 13ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது வெளியான ஒரே நாளில் யூடியூபில் 1.5 கோடி பார்வைகள் பெற்றுயிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close