தனுஷ் வெளியிட்ட ராட்சசன் பட டீசர்

  கனிமொழி   | Last Modified : 07 Sep, 2018 05:20 pm
ratchasan-movie-teaser-released-by-danush

'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்து வரும் படம் ராட்சசன். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்ற நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ் ராட்சசன் பட டீசரை  தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த படம் முதலில் 'மின்மினி' என பெயரிடப்பட்டு இருந்தது. அப்பெயரை 'ராட்சசன்' என படக்குழு மாற்றி விஷ்ணு விஷால் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். மேலும் இப்படத்தில் காலி வெங்கட், முனீஷ் காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். ஏக்சஸ் ஃபிலிம் இந்த படத்தை தயாரித்துள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகும் கதை தான் ராட்சசன். விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாகவும், அமலா பால் ஆசிரியையாகவும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close