மீண்டும் பெரிய திரைக்கு வந்தார் தேவயாணி! - களவாணி மாப்பிள்ளை ட்ரெய்லர் வெளியானது

  கனிமொழி   | Last Modified : 10 Sep, 2018 12:22 am
kalavani-mapillai-trailer-released

பல வருடங்களுக்கு பிறகு தேவயாணி நடித்திருக்கும் அட்ட கத்தி தினேஷின் களவாணி மாப்பிள்ளை படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 2015ம் வருடம் ரிலீஸ் ஆன "ஸ்த்ராபெர்ரி" படத்திற்கு பிறகு தேவயாணி நடித்துள்ள படம் களவாணி மாப்பிள்ளை.

மறைந்த பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிவாசகத்தின் மகன் காந்திமணிவாசகம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’. இந்தப் படத்தின் நாயகனாக தினேஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி மேனன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘களவாணி மாப்பிள்ளை’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. என்.ஆர் ரகுநாதன் இசை அமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிபதிவு செய்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close