விதார்த் நடிக்கும் 'வண்டி' பட ட்ரெய்லர் இதோ !

  கனிமொழி   | Last Modified : 10 Sep, 2018 12:19 am
vidharth-s-vandi-movie-trailer-is-out

விதார்த்  மற்றும் சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் 'வண்டி'. இப்படத்தை ராஜீஷ் பாலா எழுதி இயக்கியுள்ளார். சூரஜ் குரூப் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரூபி பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில்  இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிக்கும் வண்டி படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை பெற்று இருப்பவர் எஸ் ஃபோகஸ்  நிறுவனத்தின் நிறுவனர் , பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன். சென்னை 28 பாகம் 2, பவர் பாண்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை வினியோகித்த இவருடைய தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்-பார்த்திபன் நடிப்பில் உருவான "குப்பத்து ராஜா" வெகு விரைவில் வெளி வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close