தா தா 87 ட்ரெய்லர் இதோ !

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 08:12 pm
charu-hasan-s-dha-dha-87-trailer-is-out

கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ள படம் தா தா 87. அறிமுக இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

உதிரிப்பூக்கள், தளபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் சாருஹாசன். உடல்நிலைக் காரணமாக சில ஆண்டுகளாக திரைபடங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்நிலையில், சாருஹாசனின் வயதையொட்டி ‘தா தா 87’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ், அனு லாவண்யா, ஜெனி பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த ஜனகராஜ், இந்தப் படத்துக்காக மீண்டும் களம் இறங்கியுள்ளார். படத்தின் பாடல் வரிகளை இயக்குனர் விஜய் ஸ்ரீ எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. லியான்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கலை சினிமா' நிறுவனம் சார்பில் எம்.கலைச்செல்வன் தயாரித்துள்ள இந்த படம் அக்டோபர் 15ம் தேதி  ரிலீஸ் ஆகவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close