திரையுலக பிரபலங்களின் வாழ்த்துகளை பெற்ற ராட்சசன் ட்ரெய்லர் !

  கனிமொழி   | Last Modified : 22 Sep, 2018 11:39 am
ratsasan-trailer-is-been-appreciated-among-cinema-people

'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்து வரும் படம் ராட்சசன். ராமதாஸ், காளி வெங்கட், சுசானே ஜார்ஜ் ஆகியோரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இன்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ராட்சசன்' பட டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார். 


சமீபத்தில் வெளியான இந்த ட்ரெய்லருக்கு நடிகர் விஷால், ஆர்யா, பிந்து மாதவி மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி, இயக்குநர் திரு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்ற நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. . இப்படத்துக்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. அக்டோபர் 5ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படம் முதலில் 'மின்மினி' என பெயரிடப்பட்டு இருந்தது. அப்பெயரை 'ராட்சசன்' என படக்குழு மாற்றி விஷ்ணு விஷால் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். ஏக்சஸ் ஃபிலிம் இந்த படத்தை தயாரித்துள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகும் கதை தான் ராட்சசன். விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாகவும், அமலா பால் ஆசிரியையாகவும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close