பட்டைய கிளப்பும் செக்க சிவந்த வானம் படத்தின் 2வது ட்ரெய்லர்!

  கனிமொழி   | Last Modified : 22 Sep, 2018 01:01 pm
chekka-sivantha-vanam-2nd-trailer

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

'காற்று வெளியிடை' திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புராடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பெயர் தமிழில் 'செக்கச்சிவந்த வானம்' என்றும், தெலுங்கில் 'நவாப்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து படத்தின் பாடல்களையும் படக்குழுவினர் கடந்த செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close