‘சண்டக்கோழி 2 ட்ரெய்லர் வெளியானது !

  கனிமொழி   | Last Modified : 28 Sep, 2018 06:23 pm
sandaikozhi-2-trailer-is-out

விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘சண்டக்கோழி-2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 

விஷால் நடித்து லிங்குசாமி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் ‘சண்டக்கோழி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வெளியீட்டிற்கு வந்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் உடன் நடிக்கிறார்.மேலும்  ராஜ்கிரண் மற்றும் ஹரீஷ் பேராடி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சண்டக்கோழி 2 படத்தின் ட்ரெய்லர்  வெளியாகும் என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் விஷாலின் 25வது படமாக வெளிவர இருக்கும் ‘சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close