ஒரே நாளில் மூன்று மில்லியன்: மாஸ் காட்டும் சிம்பு

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 05:16 am
vrv-teaser-crosses-3-million-in-one-day

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் 3 மில்லியன் வியூஸ்களை யூட்யூபில் கடந்து கலக்கி வருகிறது. 

சிம்பு, கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வந்தா ராஜாவா தான் வருவேன்'. சுந்தர் சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். சிம்புவின் AAA திரைப்படம் சரியாக போகாத நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த 'செக்கச் சிவந்த வானம்' சூப்பர் வெற்றி பெற்றது. அதற்குப்பின், காற்றின் மொழி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்தின் மூலம், மீண்டும் கமர்சியல் டிராக்குக்கு திரும்பியுள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் வியூஸ்களை தாண்டியது.

டீசரின் முதல் பாதியில் ஸ்டைலாக அதிரடி ஆக்ஷன் நாயகனாக தோன்றும் சிம்பு, இரண்டாவது பாதியில் டான்ஸ், காமெடி, ரொமான்ஸ் என தெறிக்க விடுகிறார். சுந்தர்.சி-யின் பாணியில், படம் ஒரு கலகலப்பான மாஸ் என்டர்டெயினராக தான் இருக்கும், என ரசிகர்கள் எதிர்பார்க்கிரர்கள். டீசர் வெளியானவுடன் சமூக வலைத்தளங்களால், சுந்தர் சி, vrvteaser போன்ற ஹேஷ் டேக்குகள் டாப்பில் ட்ரெண்டாகி வந்தன.

தற்போது இந்த டீசர் ஒரே நாளில் 3 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் தாண்டியுள்ளது. அனல் பறக்கும் சிம்புவின் டீசரை பார்த்து ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.

உண்மையிலேயே சிம்பு ராஜாவா தான் வருவாரு போல இருக்கு...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close