திரையரங்கில் திரையிடப்பட்ட "பேட்ட" டிரெய்லர்!

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 09:39 am
the-petta-trailer-screened-in-the-theater

சேலத்தில், ரஜினி ரசிகர்களுக்காக "பேட்ட" திரைப்படத்தின் டிரெய்லர் திரையரங்கில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பேட்ட திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது இணய தளத்தில் உலக அளவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 5 ரோடு பகுதியில் உள்ள திரையரங்கில் ரஜினி ரசிகர்களுக்காக பேட்ட திரைப்படத்தின் டிரெய்லர் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக ரஜினி ரசிகர்கள் பேட்ட திரைப்படத்தை வரவேற்று திரையரங்கு முன்பு பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close