வைரலாகும் துருவ் விக்ரமின் 'வர்மா' ட்ரெய்லர்!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 06:35 pm
dhruv-vikram-s-varma-trailer-released

பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து உருவாகியுள்ள வர்மா படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா இன்று ட்விட்டரில் வெளியிட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டாகி, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து, அதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து வந்தார். விக்ரமை லைம்லைட்டுக்கு கொண்டு வந்த பாலா இந்த படத்தை இயக்க, ரதன் இசையமைத்துள்ளார்; சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதாநாயகிகளாக மேகா மற்றும் ரைசா நடித்துள்ளனர். துருவுக்கு இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரிய என்ட்ரியாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இன்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெய்லரை வெளியிட்டார். வெளியான ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சம் வியூஸ்களை தண்டி சென்று கொண்டிருக்கிறது வர்மா ட்ரெய்லர். 

அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரகொண்டாவின் அதிரடி & எமோஷனல் பெர்பார்மன்ஸை, இந்த படத்தில் துருவ் மீண்டும் கொண்டு வர முயற்சித்துள்ளது ட்ரெய்லரிலேயே பளிச்சென தெரிகிறது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close