நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்த 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரெய்லர்!

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 06:35 pm
super-deluxe-trailer-gets-great-reception

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிடோர் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்ற தியாகராஜன் குமாரராஜா, இரண்டாவதாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் தான் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திருநங்கை வேடத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். மலையாள நடிகர் ஃபஹத், சமந்தா உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடித்துள்ளதால், படம் தென்னிந்தியாவில் பெரிய அளவு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ட்ரெய்லர், இன்று மாலை வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்கலிளேயே, சமூக வலைதளங்களில் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு ட்ரெய்லரை பார்த்ததே இல்லை, என பெருமளவு பாராட்டி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close