கடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 05:05 pm
kennedy-club-teaser

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ’கென்னடி கிளப்’ சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

’வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் இயக்கநராக அறிமுகமானவர் சுசீந்திரன். கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் 2009-ல் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது, 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் கபடி விளையாட்டை மையமாக கொண்டு ’கென்னடி கிளப்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஆண்கள் கபடி விளையாடுவது போல் கதை இருந்தது. இப்படத்தில் பெண்கள் கபடி விளையாடுவதைபோல் படம் உருவாகியுள்ளது.

பெண் கபடி வீராங்கணைகளுக்கு பயிற்சியாளராக சசிகுமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார்.

இந்த நிலையில், ’கென்னடி கிளப்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார். இந்த டீசர் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டீசரில், ’கடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும்...அப்பதான்  நாம ஜெயிக்க முடியும்’ போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீசரில் இமானின் இசை மிரட்டுகிறது. டீசர் இதோ உங்கள் பார்வைக்காக.....

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close