காட்டு ராஜாவான  தும்பா: ட்ரைலர் உள்ளே

  கண்மணி   | Last Modified : 11 Jun, 2019 11:37 am
thumbaa-trailer

KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில் 'கனா' தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் 'புதுசாட்டம்' மற்றும்  ட்ரைலர் ரீலிஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகள் பயன்படுத்தப்படுள்ளது. புலியை ஃபோட்டோ எடுக்க விரும்பும் நாயகியும் துணைக்கும் செல்லும் நாயகன் மற்றும் நாய‌கனின் நண்பனும்  சந்திக்க கூடிய  பிரச்னைகளுடனான சில நிமிட காட்சிகளை கொண்டு  இந்த ட்ரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெயம் ரவி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தும்பா திரைப்படம் ஜுன் 21ம் தேதி திரைக்கு வர உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close